மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நான் பேசிய போது என் கட்சி எம்.பி.க்களே வெளியே சென்று விட்டனர்.. சரத் பவார்

 
பெண்களுக்கு இடஒதுக்கீடு

மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது எனது கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான எம்.பி.க்கள் எழுந்து சென்று விட்டதை கண்டேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் புனே டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், சரத் பவாரும், அவரது மகளும், மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சூலேவும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது, நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள,  மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து சரத் பவாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

சரத் பவார்

இது தொடர்பாக சரத் பவார் பதிலளிக்கையில் கூறியதாவது: காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக இருந்ததில் இருந்து இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். நாடாளுமன்றத்தின், குறிப்பாக வட இந்தியாவின் மனநிலை இந்த பிரச்சினையில் உகந்ததாக இல்லை. நான் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக இருந்தபோத, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு குறித்து பேசியது நினைவிருக்கலாம். ஒரு முறை எனது உரையை முடித்து விட்டு திரும்பிப் பார்த்தேன். எனது கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான எம்.பி.க்கள் எழுந்து சென்று விட்டதை கண்டேன்.

சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்…. மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரியா சூலே வேண்டுகோள்..

இது (பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பது)  எனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு கூட ஜீரணிக்க கூடியதாக இல்லை. அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். நான் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது, ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.