சாதி, மதத்தின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சிகள் நடக்கிறது.. சரத் பவார் வேதனை

 
சரத் பவார்

சாதி, மதத்தின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சிகள் நடக்கிறது என சரத் பவார் வேதனை தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சரத் பவார் பேசுகையில் கூறியதாவது: சாதி, மதத்தின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சிகள் நடப்பதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம். மக்களின் அடிப்படை பிரச்சினை என்ன? பணவீக்கம், உணவு மற்றும் வேலையின்மை. 

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

ஆனால் யாரும் அதில் கவனம் செலுத்தவில்லை. இன்று நீங்கள் டிவியை ஆன் பண்ணினால், ஒரு சபாவை நடத்துவோம் என்றும், வேறு யாராவது ஹனுமான் கீர்த்தனைகள் கோஷமிட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இந்த கேள்விகள்அனைத்தும் பலனளிக்குமா? உங்கள் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வா?  எனவே இதை எதிர்த்து போராட ஷாகு மகராஜ் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் நடக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜ்தாக்கரே

மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை செய்து இருந்தார். ராஜ் தாக்கரே காலக்கெடு நாளையோடு முடிவடைய உள்ள நிலையில், சரத் பவார் ஹனுமன் கீர்த்தனைகள் குறித்து சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.