செப்டம்பர் 25ல் இந்திய தேசிய லோக் தளம் கூட்டம்.. சரத் பவார், உத்தவ் தாக்கரே , நிதிஷ் குமார் பங்கேற்க சம்மதம்

 
தேவி லால்

ஹரியானாவில் இம்மாதம் 25ம் தேதி நடைபெ உள்ள இந்திய தேசிய லோக் தளத்தின் பேரணியில் பங்கேற்க சரத் பவார், நிதிஷ் குமார் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


ஹரியானா மாநிலம் பதேஹாபாத் நகரில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் துணை பிரதமருமான தேவி லாலின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் செப்டம்பர் 25ம் தேதியன்று ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி கூறியதாவது: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சி.பி.ஐ. (எம்) சீதாராம் யெச்சூரி ஆகியோரும் இந்த பேரணியில் பங்கேற்பார்கள். இதுதவிர, ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சியின் ஹனுமான் பெனிவால் இந்த பேரணியில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

பா.ஜ.க.

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒத்த எண்ணம் கொண்ட சக்திகளின் ஒருங்கிணைப்பை குறிக்கும் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பாக இது இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், சிரோமணி அகாலி தளம்  தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோருக்கு இந்த பேரணிக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது  என  தகவல்.