கடும் குளிர் அலை வீசும்... 5 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை..

 
கடும் குளிர் அலை வீசும்... 5 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை.. 

குளிர் அலை வீசி வருவதால், பஞ்சாப்,  ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய  மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம்  ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட மாநிலங்களில் புத்தாண்டுக்கு பிறகு கடுமையான மூடுபனி மற்றும் குளிர் இருந்து வருகிறது. இதன் காரணமாக  அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் இருந்து வருவதால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. அத்துடன், விமான சேவை மற்றும் ரயில் சேவை, சாலை போக்குவரத்தும் முற்றிலும் பாதிகப்பட்டுள்ளது.  டெல்லியில் நாள்தோறும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் உத்தரபிரதேசத்தில் கடும் குளிரால் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவமும் நடந்துள்ளது.

கடும் குளிர் அலை வீசும்... 5 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை.. 

இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட  5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 2 மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும்,  ராஜஸ்தான் மற்றும் பீகாரில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்படுவதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  மேலும் டெல்லியை பொறுத்தவரை குளிர் இருந்த நிலையில்,  தற்போது இந்த மூடு பனி தீவிரமாக இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருக்கிறது. பருவமழை காரணமாக ஜனவரி 10ம் தேதி முதல் இரவு முதல் அடர்த்தியான மூடு பனி மற்றும் குளிர் அலைகள் அனைத்தும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குளிர் அலை  காரணமாக டெல்லியில் இன்று இரவு 1.8% பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்ச பதிவாக இது  பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.