ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஆற்றில் சடலமாக மீட்பு

 
ri

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் புனே பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் யவத் கிராமம்.   இக்கிராமத்தில் ஓடும் பீமா ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் மனித உடல் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.   இதை எடுத்து அப்பகுதியில் ஒரே பரபரப்பு எழுந்திருக்கிறது.   அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.  இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி இருக்கிறது.

h

 இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை உயரதிகாரிகள் உடல்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.  இதன் பின்னர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர் போலீசார்.

 அப்போது மேலும் மூன்று சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.  தொடர்ந்து அது குறித்து போலீசாரின் விசாரணையில் , மீட்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் , அவர்கள் காம்காவ் பகுதியைச் சேர்ந்த மோகன் உத்தம் பவார் அவரது மனைவியை சங்கீதா பவார்,  மகள் ராணி , மருமகன் சாம்ராவ் பண்டித்,  பேரப்பிள்ளைகள் ரிதேஷ்,  சோட்டு சாம்ராவ்,  கிருஷ்ணா என்பது தெரிய வந்தது.  

 சடலமாக மீட்கப்பட்ட ஏழு பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.   ஒவ்வொருவரின் உடல்களும் 200 முதல் 300 மீட்டர் இடைவெளியில் மீட்கப்பட்டிருக்கிறது.    சம்பவம் குறித்தும் தற்கொலை குறித்தும் போலீசார் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

சடலங்களாக மீட்கப்பட்ட ஏழு பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று 7 பேரின் மரணம் அதற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.  

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஆற்றில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதே பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.