32 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த மூத்த தலைவர் திடீர் விலகல்..

 
32 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த மூத்த தலைவர் திடீர் விலகல்..

குஜராத்தில் 32 ஆண்டுகளாக  பாஜக-வில் இருந்த  முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயணன் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 குஜராத் மாநிலத்தில் தற்போது பா.ஜ.க. ஆளும் கட்சியாக  இருந்து வருகிறது. தொடர்ந்து நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தலை குஜராத் மாநிலம்  எதிர்கொள்கிறது. இந்த சூழலில், அக்கட்சியில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஜெய் நாராயண் வியாஸ் திடீரென  விலகியிருக்கிறார்.  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவருமான ஜெய் நாராயணன் தனது பதவி விலகல் கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பி விட்டதாக  செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

bjp

அடுத்த மாதம், குஜராத் சட்டசபை தேர்தலில் சித்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனினும் சுயேச்சையாக  போட்டியிடவில்லை என்றும்,  தனது ஆதரவாளர்களை கலந்து ஆலோசித்து எந்த கட்சி என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் ஜெய் நாயாரணன் கூறினார்.  கட்சியிலிருந்து விலகியதற்காக காரணமாக,  படான் மாவட்ட பா.ஜ.க. கமிட்டியின் பணிகள் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும், தொடர்ந்து ஏமாற்றத்திற்கு ஆளானேன் என்றும் தெரிவித்தார்.