கேரளாவில் பள்ளி மாணவியை மேடைக்கு அழைத்த விழா அமைப்பாளர்களை கண்டித்த முஸ்லிம் மத குரு..

 
பரிசு வழங்கும் விழா

கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார். 

முஸ்லிம் பள்ளி மாணவிகள்

இதற்கு அந்த விழாவில் கலந்து கொண்ட சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா சங்கத்தின் மூத்த மதக் குரு அப்துல்லா முசலியர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்துல்லா முசலியர் அந்த நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவியை இங்கு (மேடைக்கு) அழைத்தது யார்? நீங்கள இதை மீண்டும் செய்தால், நான் உங்களுக்கு காட்டுவேன். அத்தகைய பெண்கள் இங்கு அழைக்காதீர்கள். உங்களுக்கு சமஸ்தா விதிகள் தெரியாதா? பாதுகாவலை இங்கே அழைக்கவும், நீங்கள் தான் (மாணவியை) அழைத்தீர்களா? எங்களை இங்கே உட்கார வைத்து தேவையற்ற செயல்களை செய்யாதீர்கள். இது புகைப்படங்களில் வராதா? என தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மதக்குருவுக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பரிசு வழங்கும் விழா

முஸ்லிம் மாணவர் சம்மேளத்தின் முன்னாள் தேசிய துணை தலைவர் பாத்திமா தஹிலியா கூறுகையில், திறமையுள்ள சிறுமிகளை மதத்துடன் நெருக்கமாக பிடித்து ஊக்கப்படுத்துவதை தலைமைத்துவம் உறுதி செய்ய வேண்டும். அவர்களின் திறன்கள் சமூகம் மற்றும் மதத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும். அவர்களை மேடையில் இருந்து ஒதுக்கி வைத்து அவமானப்படுத்துவது சமூகத்தில் தொலைதூர விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய அவமானங்களை தாங்குபவர்கள் பின்னர் மதத்தையும் அதன் தலைவர்களையும் வெறுக்கக்கூடும் என தெரிவித்தார்.