மாமனார் தொகுதியில் போட்டியிடும் மருமகள்.. மெயின்புரி இடைத்தேர்தலுக்கான சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அறிவிப்பு

 
டிம்பிள் யாதவ்

மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கட்சி வேட்பாளராக போட்டியிடுவார் என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த  சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இறந்தது முலாயம் சிங் யாதவ்தான்.. ஆனால் அவர் இவரில்லை… குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மருமகள்

மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுவார் என அந்த கட்சி அறிவித்துள்ளது. டிம்பிள் யாதவ் இரண்டு முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். அந்த இரண்டு முறையும் கன்னோஜ் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்து விட்டதாக தவறான செய்தி வெளியான சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா…

2009ம் ஆண்டில் நடைபெற்ற பிரோசாபாத் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ், காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். எதிர்வரும் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனென்றால் ஆளும் கட்சியான பா.ஜ.க. கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது.