ஹைதராபாத் தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!!

 
Modi - NITI Aayog Modi - NITI Aayog

ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  8 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரூபி ஹோட்டல் கட்டிடத்தின் பாதாள அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  ஹோட்டலின் பாதாள அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார பைக்கில் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக சென்னையை சேர்ந்த சீதாராமன் என்ற 48 வயது நபர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

tn

கட்டிடத்தின் உள்ள ஹோட்டல் அறைகளில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் தீயில் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் இருந்து பலரை மீட்டதுடன், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 




இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் தங்கும் விடுதியில் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வேதனை அளிக்கிறது; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.