சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!!

 
sabarimala

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளை தவிர தமிழ் மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம் தோறும் திறக்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளது. தமிழ் மாத பிறப்பை ஒட்டி முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

sabarimala
இந்நிலையில்  சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிகுளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை வைத்து சபரிமலையில் வழிபடும் நிகழ்வுக்கு நிறைப்புத்தரிசி பூஜை என்று பெயர்.  இதற்காக சபரிமலை கோயில் நடை மாலை திறக்கப்படுகிறது. அறுவடை செய்த நெற்கதிர்களை கருவறைக்குள் வைத்து வழிபட்டு பின்னர் அது  பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

sabarimala
இதனிடையே  மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.