வக்ஃப் சொத்துக்கள் குறித்து விசாரணை.. ஆசம் கானை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதற்கான நடவடிக்கை.. சமாஜ்வாடி

 
வக்ஃப்

உத்தர பிரதேசத்தில் வக்ஃப் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தும் யோகி ஆதித்யநாத்தின் முடிவு, ஆசம் கானை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதற்கான நடவடிக்கை என்று சமாஜ்வாடி குற்றம் சாட்டியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அண்மையில் மாநிலத்தில் இயங்கி வரும் மதரஸாக்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என யோகி அரசு உத்தரவிட்டது. 

யோகி

உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கையை சமாஜ்வாடி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் எதிர்த்தன. மேலும், இது ஒரு சமூகத்தை குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறின. அதேசமயம்,யோகி அரசின் நடவடிக்கையை ஷியா மற்றும் சன்னி மதகுருமார்கள் வரவேற்றுள்ளனர். உத்தர பிரதேசத்தில் சன்னி மத்திய வக்ஃப் வாரியத்துக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களும், ஷியா வக்ஃப் வாரியத்து்ககு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களும் உள்ளதாக தகவல்.

ஆசம் கான்
வக்ஃப் சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யும் யோகி அரசின் முடிவு, அசாம் கானை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் குற்றம் சாட்டினார். மேலும், வக்ஃப் சொத்துக்கள் ஏற்கனவே சி.பி.ஐயால் விசாரிக்க்பபட்டு வருகின்றன. எனவே இந்த கணக்கெடுப்பு எங்கே தேவை. இந்த நடவடிக்கை முகமது ஆசம் கானை பொய் வழக்குகளில் சிக்க வைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். வக்ஃப் வாரியத்தில் ஆசம் கான் கணிசமான அதிகாரங்களை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.