இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!!

 
tn

இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு  3  நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

supreme court

தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக பெறப்பட்ட பொது நலன் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அஸ்வினி உபாத்தியாய என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நடைமுறைக்கு ஒத்து வராத இலவச அறிவிப்புகளை வெளியிடும், அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி , அதன் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது பொதுநல மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

tn

இந்நிலையில்  இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3  நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தொடரப்பட்ட நிலையில்  விரிவான விவாதம் தேவை என்பதால் 3 நீதிபதிகள் அடங்கிய  அமர்வு முன்பு பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  ஏற்கனவே தேர்தல் இலவசம் தொடர்பாக 2013ல் சுப்பிரமணிய பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவுகளை பரீசீலனை செய்ய வேண்டும் என்பதால் கூடுதல் விசாரணைக்காக வழக்கை  3 நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இலவசங்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில், 2013ஆம் ஆண்டு 2 நீதிபதிகள் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவும் பரிசீலித்துள்ளது.