இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.. வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர்

 
ஜெய் சங்கர்

இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்பதில் நாங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறோம் எனறு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் சவூதி அரேபியாவுக்கு  3 நாள் பயணமாக  சென்றுள்ளார். அவர் வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறை. ரியாத்தியில்  இந்திய சமூகத்தினர் மத்தியில் ஜெய் சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா தனது கடன், வங்கி, கல்வி மற்றும்  தொழிலாளர் கொள்கையை மாற்றுவதற்கான வழிகளை பற்றி சிந்திக்கிறது. இந்தியா தனது பொருளாதாரத்தை வளர்க்கவும், அதிக வருமானம் கொண்ட நாடாக மாறவும் சக்தி வாய்ந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இந்திய பொருளாதார வளர்ச்சி

இதற்கு நிறைய தொலை நோக்கு, நமது நிதி வளங்களில்  விவேகமான மேலாண்மை தேவை. பல பெரிய சீர்த்திருத்தங்கள் நடந்துள்ளன. அதன் விளைவை இரண்டு சுவராஸ்யமான முன்னேற்றங்களில் காணலாம். 2021 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், நாங்கள் இதுவரை செய்யாத அதிகபட்ச ஏற்றுமதியை செய்துள்ளோம். எங்கள் மொத்த ஏற்றுமதி 67,000 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் சரக்கு வர்த்தகத்தின் மதிப்பு 40,000 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. உக்ரைன் நெருக்கடியால் உணவு, எண்ணெய் மற்றும் ஷிப்பிங் விலை உயர்வு போன்ற பல சவால்களை உலகம் எதிர்க்கொள்கிறது. 

ஏற்றுமதி

ஆனால் இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்பதில் நாங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறோம். குறைந்தபட்சம் 7 சதவீத வளர்ச்சியை பெறுவோம்.  இந்தியா ஒரு வர்த்தக சக்தி என்ற எண்ணம் இன்று நம்பகமானதாகி விட்டது.  கோவிட் நெருக்கடியின் போது எங்கள் சர்வதேச நட்புகளும் வழங்கப்பட்டதை நாங்கள் கண்டோம். சவூதி அரேபியா மிகவும் உதவிக்கரமாக இருந்தது மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தை வழங்கியது.  கோவிட்டின் இரண்டு ஆண்டுகளில் நாடு சோதனை செய்யப்பட்டது, ஆனால் நாங்கள் கடந்து வந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.