அமைச்சரின் நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாய் சன்மானம் - மடாதிபதி அறிவிப்பு

 
ஜ்

 கல்வித்துறை அமைச்சரின் நாக்கை அறுப்பவருக்கு பத்து கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று அயோத்தி மடாதிபதி ஜெகத்குரு பரமன்ஸ் ஆச்சாரியா அறிவித்திருக்கிறார்.  மடாதிபதியின் இந்த அறிவிப்பு பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

பீகார் மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் சந்திரசேகர்.  இவர் அண்மையில் ராமாயண கதையை கூறும் ராமசரிதமானஸ் என்கிற நூலை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.   அந்த நூலை பற்றி அவதூறாக பேசியுள்ளார் என்று சர்ச்சை எழுந்ததை அடுத்து அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மடாதிபதிகள் வலியுறுத்தி வருகிறார்கள் .

ன்

 மடாதிபதி ஜெகத்குரு பரமன்ஸ் ஆச்சார்யா,    அமைச்சர் சந்திரசேகரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.  அவர் மன்னிப்பும் கேட்க வேண்டும்.   இது நடக்காவிட்டால் அவரது நாக்கை அறுப்பவருக்கு 10 கோடி ரூபாய் சன்மானத்தை அறிவிக்கிறேன் என்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

 ராமசரிதமானஸ் வெறுப்பை தூண்டுபவை அல்ல மக்களை இணைப்பது என்று குறிப்பிட்டவர்,   ராமசரித மானஸ் மனிதநேயத்தை நிலை நிறுத்துவது.  இந்திய கலாச்சாரத்தின் உருவமாக அது உள்ளது .  நாட்டில் பெருமிதமாக விளங்குகிறது.   இதுபோன்ற கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 நாளந்தா திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் நடந்த 15 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சந்திரசேகர் பேசிய போது,  ராமசரிதமானஸ், மனுஸ்மிருதி, சிந்தனைக்கொத்து  ஆகிய நூல்கள் வெறுப்பை பரப்புபவை .  அன்புதான் நாட்டை சிறக்க செய்யும். வெறுப்பு அல்ல என்று பேசி உள்ளார்.   மனுஸ்மிருதியில் பல பகுதிகள் இழிவு படுத்தும் வகையில் இருக்கின்றன என்று கூறிய அமைச்சர் ,  ராமசரிதமானஸ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி அளிக்கக்கூடாது அவர்கள் பாலை குடித்துவிட்டு விஷத்தைக் காக்கும் பாம்புகள் போன்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதனால்தான் இந்த சர்ச்சை வெடித்திருக்கிறது.