பொட்டு வைக்காத பெண் பத்திரிகையாளரிடம் பேச மறுத்த சமூக ஆர்வலர்

 
Right-Wing Leader

மகாராஷ்டிராவில், பொட்டு வைக்காத பெண் பத்திரிகையாளரிடம் பேச மறுத்த சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிருபரை பிண்டி அணியச் சொன்ன சம்பாஜி பிடேவுக்கு மகாராஷ்டிர மகளிர் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மும்பையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உடனான சந்திப்புக்கு பின் சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பெண் என்பவள் பாரத மாதாவுக்கு நிகரானவள், பொட்டு வைக்காமல் விதவை போல் தோன்றக்கூடாது 

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், விளக்கம் கேட்டு சம்பாஜி பிடேவுக்கு மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சகங்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “உங்களது கூற்று ஒரு பெண்ணின் பெருமையையும், சமூக அந்தஸ்தையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. பொட்டு வைப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 


புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் தலித் மற்றும் மராத்தா குழுக்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் வெடித்ததை அடுத்து 2018 இல் பிடே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . எனினும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.