அரசுக்கு பதிலடி! பேருந்து நிலையத்தை திறந்து வைத்த எருமை மாடு

 
ம்m

அரசாங்கத்திடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து காலங்கள் போய்க் கொண்டிருப்பதால் பல தேவைகளை அந்தந்த பகுதியினரே தாங்களாகவே நிறைவேற்றிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.  எல்லா மாநிலங்களிலும் இந்த அவலம் இருக்கத்தான் செய்கிறது.  கர்நாடக மாநிலத்திலும் கதக் மாவட்டத்தில் அப்படி ஒரு அவலம் நிகழ்ந்திருக்கிறது.

ட்ட்

 பேருந்து நிறுத்தம் வேண்டும் என்று கதக் மாவட்டத்தில் உள்ள மக்கள் பல காலங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுது என்று பொறுமை இழந்து,  அப்பகுதி மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு தென்னங்கீற்றில் ஒரு பேருந்து நிலையம் அமைத்திருக்கிறார்கள்.   அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்க வேண்டும் என்பதற்காகவே தென்னங்கீற்றில் அமைக்கப்பட்ட அந்த பேருந்து நிலையத்தை வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.   இதை பார்த்து  அரசின் மெத்தனப் போக்கை மக்கள் விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி செய்துள்ளனர்.

 அதற்கு மேலாக அந்த பேருந்து நிலையத்தை ஒரு எருமை மாட்டை அழைத்து வந்து திறந்து வைத்திருக்கிறார்கள்.   தென்னங்கீற்றில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பேருந்து நிலையத்தை எருமை மாடு வந்து திறந்து வைத்தது என்ற தகவல் வலைத்தளங்களில் பரவி கர்நாடக அரசுக்கு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது மாதிரி அரசுக்கு எதிரான இந்த விமர்சனங்களை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் கதக் மாவட்ட மக்கள்.