பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த 5 சிறுமிகள் மீட்பு

 
ப்

பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தார்வார் டவுன்  பழைய பேருந்து நிலையத்தில்   ஐந்து சிறுமிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக குழந்தைகள் மற்றும்பெண்கள் நலத்துறையினருக்கு  புகார் சென்றிருக்கிறது.

ப்க்

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.  அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளில் ஐந்து சிறுமிகள் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.  

உடனே அந்த சிறுமிகளிடம் சென்று விசாரணை நடத்தி ஐந்து சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.  

மேற்கொண்டு நகரம் முழுவதிலும் வேறு எங்கேனும் சிறுமிகள் பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்களா என்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.