டெல்லியில் இன்று குடியரசு நாள் கொண்டாட்டம்

 
tn

74வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் இன்று முப்படை அணிவகுப்பு நடைபெறுகிறது.

National Flag

நாட்டின் 74வது குடியரசு நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றபின் முதன்முறையாக தேசியக்கொடியை பறக்கவிடுகிறார். அத்துடன் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் குடியரசு தலைவர். குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல்-சிசி பங்கேற்கிறார். 

Indian Flag

குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவ படைப்பிரிவும் கலந்து கொள்ள உள்ளது.  வரலாறு சிறப்பு மிக்க கடமை பாதையில் கலை நிகழ்ச்சிகளும் வீரதீர செயல்களும் இராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் ஒப்படைகளின் அணிவகுப்பும் நடைபெறுகிறது.  காலை 10:30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழா நிறைவடைகிறது. விழா தொடங்குவதற்கு முன்பாக தேசிய போர் நினைவு இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்