ஜியோ சேவைகள் முடக்கம் - பயனர்கள் அவதி

 
jio network

நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக ஜியோ சேவை முடங்கியுள்ளது. 

Reliance Jio Is Offering Buy 1, Get 1 Free Offer On All Its JioPhone  Prepaid Plans | JIO OFFER | 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ' - 200  ரூயாக்கும் குறைவான ஜியோவின் அசத்தல் திட்டங்கள் !

கிராமங்கள் தொடங்கி மெட்ரோ நகரம் வரை பலதரப்பட்ட மக்கள் ஜியோ தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் பல இடங்களில் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் ஜியோவின் சேவை முடங்கியுள்ளது.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சுமார் 63% பயனர்கள் தங்கள் தொலைபேசி, இணைய சேவையினை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த புதன்கிழமையன்றும் ஜியோ சேவையில் பாதிப்பு இருந்ததாக தெரிகிறாது. ஜியோவின் பைபர் சேவையும் இந்தியாவின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து வேலை செய்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஜியோ சேவை பாதிப்பு குறித்து 5 நிமிடங்களில் 300 புகார்கள் வந்து குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை ஜியோ நிறுவனம் இதுகுறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இது ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் #Jiodown என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.