கேரளாவில் கனமழை - ரெட் அலர்ட் வாபஸ்!!

 
tn

கனமழை காரணமாக கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.


Rain

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  பல மாவட்டங்களில் கன மழை காரணமாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . இதுவரை கனமழையினால் கேரளாவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளது. வெள்ளத்தில் சாலைகள் பல அடித்து செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் மக்கள் இயல்பான வாழ்க்கையை இழந்துள்ளனர்.

rain

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்  பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டது. இதனால் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் தாழ்வான பகுதியில் வசிப்பார் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது