70 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த தவறுகள், பாவங்களுக்காக காஷ்மீர் மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க.

 
ரவீந்தர் ரெய்னா

ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன் ராகுல் காந்தி கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செய்த தவறுகள் மற்றும் பாவங்களுக்காக தேசத்திடம் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா வலியுறுத்தினார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நாளை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நுழைகிறது. இந்நிலையில், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செய்த தவறுகள் மற்றும் பாவங்களுக்காக ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் ரவீந்தர் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதே பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காந்தி குடும்பமும் காங்கிரஸூம் ஜம்மு காஷ்மீர் தொடர்பான வரலாற்று தவறுகளை செய்துள்ளன. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய பயங்கரவாதத்தின் வெடிப்புக்கு நேரடி பொறுப்பாளிகள். ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன் ராகுல் காந்தி கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செய்த தவறுகள் மற்றும் பாவங்களுக்காக தேசத்திடம் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

ராகுல் காந்தி

காந்தி தலைமையிலான காங்கிரஸ் குடும்பம் செய்த அட்டூழியங்களை மறக்க முடியாது. அதன் தவறான கொள்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த தேசியவாதிகளை அவர்கள் எப்படி அவமானப்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது பற்றிய நீண்ட பட்டியல் உள்ளது. 1947ல் தேசம் ஏன் பிரிக்கப்பட்டது என்பதற்கும் காந்தி பதிலளிக்க வேண்டும். காஷ்மீர் மற்றும் லடாக்கின் முக்கிய பகுதிகள் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. அதேநேரத்தில் அக்சாய் சின் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்று அவர் மக்களுக்கு சொல்ல வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்) பாரத மாதாவை முதுகில் குத்தியுள்ளனர். 

காங்கிரஸ்

பயங்கரவாதத்தை ஆதரித்த கட்சிகளுக்கு அவர்கள் (காங்கிரஸ்) அனுதாபம் காட்டினர். அவர்களின் ஆட்சியின் போது லால் சவுக்கில் (ஸ்ரீநகர்) தேசியக் கொடியை ஏற்ற முயன்ற சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் உள்ளிட்ட தேசியவாதிகள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம் உரிமைகள் பறிக்கப்பட்ட பெண்கள் உள்பட சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நீதி வழங்கியுள்ளார். பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தி, தேவையான திருத்தங்களை செயல்படுத்தவதன் மூலம் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தன் மூலம் ஜம்மு காஷ்மீரில்  அடிமட்ட ஜனநாயகத்தை பா.ஜ.க. எளிதாக்கியது மற்றும் பலப்படுத்தியது. மோடி உண்மையிலேயே நாட்டை ஒருங்கிணைத்தார், அதே நேரத்தில் காங்கிரஸ் வேறுவிதமாக செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.