திருமண பலாத்காரம்... கணவனை மிரட்ட பெண்கள் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் அபாயம்...

 
h

திருமண  பலாத்காரத்தை குற்றமாக்கினால் குடும்ப உறவில் ஆண்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.  கணவனை  மிரட்ட பெண்கள் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது.   மனைவியின் விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வதை குற்றமாக கறுத வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன .

o

தற்போது இருக்கும் சட்டங்களின்படி இதில் ஆண்களுக்கு சில விதி விலக்குகள் இருக்கின்றன .  அவற்றை நீக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

 இந்த நிலையில் புருஸ் ஆயோ டிரஸ்ட் என்கிற அரசு சாரா அமைப்பின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது .  அந்த மனுவில்,   திருமண பலாத்காரத்தை குற்றமாக பார்ப்பது என்பது திருமணம் என்கிற கட்டமைப்பை சீர்குலைத்து விடும் அபாயம் இருக்கிறது.   இந்த விவகாரத்தில் இருக்கும் ஒரே சாட்சி அல்லது ஆதாரம் மனைவிதான்.   

அப்படி இருக்கும்போது,   குடும்ப வன்முறை தொடர்பான பொய் வழக்குகளால் பல ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.  இதில்,  திருமண பலாத்காரத்தை குற்றமாக்கினால் குடும்ப உறவில் ஆண்கள்  ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.   மேலும்,   கணவனை மிரட்டவும் தன் கட்டுப்பாட்டில் கணவனை வைத்திருக்கவும் பெண்கள் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.  திருமண பலாத்கார வழக்கில் இந்த புதிய மனு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.