பிரதமர் மோடி சொன்னதை செய்தார்.. மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்ட காஷ்மீரின் குலாம் அலி புகழாரம்

 
குலாம் அலி

பிரதமர் மோடி சொன்னதை செய்தார் என்று மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குலாம் அலி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குர்ஜார் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவரும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான குலாம் அலியை, மத்திய அரசின்ஆலோசனையின் பேரில் மாநிலங்களவைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரை செய்தார். குடியரசு தலைவரால் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்ட பா.ஜ.க.வின் குலாம் அலிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டது  தொடர்பாக குலாம் அலி கூறியதாவது: பா.ஜ.க.வில் நாங்கள் பதவிக்காக வேலை செய்யவில்லை. 

மோடி

கட்சிக்காக தன்னலமின்றி உழைத்தேன், கட்சி என் விசுவாசத்தை, பணியை பார்த்தது. பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது எனது வெற்றி அல்ல, முழு ஜம்மு காஷ்மீருக்கு கிடைத்த வெற்றி. என்னை பொறுத்தவரை, நான் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த வெற்றியாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அரசியல் அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரம் அளிப்போம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். 

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

பிரதமர் மோடி சொன்னதை செய்தார். இது குர்ஜார் சமூகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். குலாம் அலி நியமனம் தொடர்பாக பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரிலிருந்து மாநிலங்களவைக்கு குர்ஜார் முஸ்லிமான குலாம் அலியை குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இது குறிப்பிடத்தக்க படியாகும். சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு முன்பு, சமூகம் உண்மையில் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் அவர்களுக்கு அனைத்து சமூக நலன்களும் மறுக்கப்பட்டன என பதிவு செய்து இருந்தார்.