நேருவின் நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஆனால் கொள்கைகளுக்கு அது பொருந்தாது.. ராஜ்நாத் சிங்

 
ரொம்ப பேச மாட்டாரு… ஆனா கருத்தா பேசுவாரு.. பாராட்டு மழையில் நனையும் ராஜ்நாத் சிங்…..

நேருவின் நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஆனால் கொள்கைகளுக்கு அது பொருந்தாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு நாள் பயணமாக ஜம்மு அண்ட் காஷ்மீர் சென்றார். அங்கு, பணியின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.  அங்கு நடைபெற்ற  விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: நாட்டிற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வோம். நமது ராணுவம் எப்போதும் நமது நாட்டிற்காக இந்த உயர்ந்த தியாகத்தை செய்திருக்கிறது. 

நேரு

1999  போரில் நமது பல துணிச்சலான வீரர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர், அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். 1962ல் லடாக்கில் உள்ள நம் பகுதியை சீனா கைப்பற்றியது, அப்போது பண்டிட் நேரு நமது பிரதமராக இருந்தார். அவருடைய நோக்கங்களை நான் கேள்வி கேட்க மாட்டேன். நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஆனால் கொள்கைகளுக்கு அது பொருந்தாது. 

சீனா, பாகிஸ்தான்

இருப்பினும் இன்றைய இந்தியா  உலகில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது, இப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். அது எப்படி சிவன் வடிவில் பாபா அமர்நாத் நம்முடன் இருப்பதும், எல்.ஓ.சி. முழுவதும் அன்னை சாரதா சக்தியாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.