பா.ஜ.க.வின் சின்னம் என்பதாலேயே இனி தாமரையை தேசிய மலராக கருத கூடாதா?..காங்கிரஸை மறைமுகமாக தாக்கிய ராஜ்நாத் சிங்

 
ரொம்ப பேச மாட்டாரு… ஆனா கருத்தா பேசுவாரு.. பாராட்டு மழையில் நனையும் ராஜ்நாத் சிங்…..

ஒரு கட்சியின் சின்னம் என்பதாலேயே இனி தாமரையை தேசிய மலராக கருத கூடாதா? என்று காங்கிரஸ் கட்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக தாக்கினார்.

உலகின் பெரும் பொருளாதார மதிப்பை கொண்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20  கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான தலைமை பொறுப்பை டிசம்பர் 1ம் தேதி இ்ந்தியா ஏற்கவுள்ளது. ஜி20  கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான லோகோ, கருத்துரு, வலைத்தளம் ஆகியவற்றை பிரதமர் அண்மையில் வெளியிட்டார். லோகோவில் தாமரை இடம் பெற்றிருப்பதை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. 

ஜி20  கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான லோகோ

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இப்போது பா.ஜ.க.வின் தேர்தல் சின்னம் (தாமரை)  ஜி20ன் இந்தியாவின் தலைமை பதவிக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக மாறியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் அதேவேளையில், மோடியும், பா.ஜ.க.வும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம் என தெரிவித்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ஒரு கட்சியின் சின்னம் என்பதாலேயே இனி அதை தேசிய மலராக கருத கூடாதா? என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ்
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூட்டம் ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: நமது பூர்வீகத்துடன் தொடர்புடைய சின்னங்கள் குறித்து சர்ச்சைகள் வெடிக்கின்றன. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தை கட்டுப்படுத்தும் நாடுகளுடன் ஜி-20 லோகோ தொடங்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அத்தகைய கூற்றுக்களை அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. 1950ல் தாமரை தேசிய மலராக அறிவிக்கப்பட்டது என்பது நிசர்னம். தாமரை இந்தியாவின் பாரம்பரிய சின்னம் என்பதால் அவர்கள் அதை (ஜி20 லோகோவில் தாமரை) செய்தார்கள். 1857ல் முதல் சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டபோது, புரட்சியாளர்கள் ஒரு கையில் தாமரையையும், மற்றொரு கையில் ரொட்டியையும் ஏந்தி போராடினார்கள். தேவையற்ற ஒரு சர்ச்சை உருவாக்கப்படுகிறது. ஒரு கட்சியின் சின்னம் என்பதாலேயே இனி அதை தேசிய மலராக கருத கூடாதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.