இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ராஜீவ் குமார்

 
rajiv kumar

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்றார் 

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுசில் சந்திரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார்  தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ராஜீவ் குமார்  தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

election commision


 
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் குமார் ஜார்கண்ட், பீகார், மற்றும் மத்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்தவர். தற்போது இவர் தேர்தல் ஆணையராக உள்ளார்.  1984 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் இணைந்த ராஜீவ்குமார் பதவியில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக மத்திய அரசின் செயலாளராக பணிபுரிந்தார். நிதித்துறை செயலாளராக 2020ல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்,   பப்ளிக் எண்டர்பிரைசஸ் செலக்சன் போர்டு என்கிற அரசு நிறுவனங்களுக்கு மூத்த அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.   நான்கு மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்த ராஜீவ் குமார்,  அதே 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 இந்நிலையில் இன்று இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்றார்.