4ம் தேதிக்கு பிறகு மாநிலத்தில் என்ன நடந்தாலும், அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன்... உத்தவ் அரசை எச்சரித்த ராஜ் தாக்கரே

 
இது என்னடா மகாராஷ்டிரா அரசியலுக்கு வந்த சோதனை! ஒரு சீட் ஜெயிச்ச ராஜ் தாக்கரேவும் சரத் பவாருடன் சந்திப்பு!

மே 3ம் தேதிக்குள் ஒலி பெருக்கிகளை மகா விகாஸ் அகாடி அரசாங்கம் தவறினால், அதன் பிறகு மாநிலத்தில் என்ன நடந்தாலும், அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என உத்தவ் தாக்கரே அரசுக்கு ராஜ் தாக்கரே இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அம்மாநில அரசுக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவுரங்கபாத்தில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி சார்பில் மெகா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: மே 4ம் தேதிக்குள் ஒலி பெருக்கிகளை அகற்றவில்லை என்றால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். 

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

மே 3ம் தேதிக்குள் ஒலி பெருக்கிகளை மகா விகாஸ் அகாடி அரசாங்கம் தவறினால், அதன் பிறகு மாநிலத்தில் என்ன நடந்தாலும், அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். மகாராஷ்டிராவில் அதன் பிறகு என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நான் இங்குள்ள காவல்துறையினரிடம் சொல்ல விரும்புகிறேன், வெளியே சென்று இந்த ஒலிபெருக்கிகளை இப்போதே அகற்ற தொடங்குங்கள். நாங்கள் உங்களுக்கு (அவுரங்கபாத் போலீஸ்) பலத்தை காட்டுவோம். அவர்கள் (முஸ்லிம்கள்) செய்யும் இந்த செயல்களை நிறுத்துங்கள். கோயில்கள் மற்றும் பிற மத இடங்களிலிருந்தும் அனைத்து ஒலி பெருக்கிகளையும் அகற்றவும், ஆனால் முதலில் அவர்களின் (மசூதிகளில் இருந்து) அகற்றவும் . 

மகாராஷ்டிரா போலீஸ்

இன்று மகாராஷ்டிராவின் முதல் நாள் (மகாராஷ்டிரா தினம்), மே 3ம் தேதி ஈத். நான் பண்டிகைகளை கெடுக்க விரும்பவில்லை. ஆனால் 4ம் தேதியிலிருந்து நான் கேட்க மாட்டேன். நாங்கள் எங்கெல்லாம் ஒலி பெருக்கியை பார்க்கிறமோ, அதன் முன் ஹனுமன் கீர்த்தனைகளை படிப்போம், ஒலி பெருக்கிகளை நிறுத்துமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கேட்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உத்தர பிரதேசத்தில் அதை (ஒலி பெருக்கிகள் அகற்றம்) செய்ய முடிந்தால், ஏன் மகாராஷ்டிராவில் செய்யக்கூடாது? வரும் நாட்களில் விதர்பா, கொங்கன், மேற்கு மகாராஷ்டிரா, கிழக்கு மகாராஷ்டிரா ஆகிய அனைத்து நகரங்களிலும் பேரணி நடத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.