பெங்களூரில் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

 
rn

பெங்களூருவில் நேற்று முன்தினம்  முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழைப்பொழிவு பெங்களூருவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மூன்று நகரங்களில் 125 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது . பெங்களூருவில் சராசரியாக 131 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் நேற்று ஈடுபட்டனர்.  இருப்பினும் மக்கள் கனமழை காரணமாக வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூருவில் கனமழையின் காரணமாக விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

tn
பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அத்துடன் நகரங்களில் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடைக்கிறது . பழைய விமான நிலைய சாலைகளில் வெள்ளத்தில் பேருந்துகள் சிக்கிக் கொண்டு கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன.  கனமழையால் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைகளை தவிர மக்கள் அனாவசியமாக வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி  துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

tn

வருகிற ஏழாம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.