பி.பி.சி. ஆவணப்படம் விவகாரம்... உண்மையை மறைக்க முடியாது, உண்மை எப்போதும் வெளியே வரும்- ராகுல் காந்தி

 
பிபிசி, மோடி

உண்மையை மறைக்க முடியாது, உண்மை எப்போதும் வெளியே வரும் என்று 2022 குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி.யின் சர்ச்சைக்குரிய ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது குறித்து ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி நேற்று தனது யாத்திரைக்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2002 குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி.யின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை மற்றும் நடைப்பயணத்தின் விளைவுகள் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:

ராகுல் காந்தி

நம் வேதங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை படித்தால் உண்மையை மறைக்க முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள். உண்மை எப்போதும் வெளிவரும். நீங்கள் நிறுவனங்களை தடை செய்யலாம் அல்லது பயன்படுத்தலாம், நீங்கள் சி.பி.ஐ., அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஆனால் உண்மை பிரகாசமாக ஒளிருகிறது. அது வெளியே வருவதற்கு ஒரு மோசமான வழி உள்ளது.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

நடைப்பயணம் அடிப்படையான, மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றை சாதித்துள்ளது. நடைப்பயணம் செய்ததை மாற்ற முடியாது. இந்தியாவை பற்றிய இரண்டு பார்வைகள் இருப்பதை இது காட்டுகிறது. ஒன்று வெறுப்பு நிறைந்தது, திமிர் பிடித்தது மற்றும் கோழைத்தனமானது. மற்றொன்று அன்பு நிறைந்தது, அரவணைப்பு மற்றும் தைரியமானது. இந்த நடைப்பயணம் இந்த இரண்டு பார்வைகளையும் முற்றிலும் தெளிவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.