மோர்பி தொங்கு பாலம் விபத்து.. மக்கள் உயிர்களை இழந்துள்ளனர், இந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் மக்கள் உயிர்களை இழந்துள்ளனர், இந்த சம்பவத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் மோர்பி தொங்கு பாலத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்ததாக தகவல்.

விபத்து நடந்த மோர்பி தொங்கு பாலம்

மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவத்துக்கு யார் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்க மறுத்து விட்டார். அதேசமயம், இந்த சம்பவத்தை (மோர்பி பாலம் விபத்து) அரசியலாக்க விரும்பவில்லை. மக்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதை (இந்த சம்பவத்தில் அரசியல்) செய்வது அவர்களுக்கு அவமரியாதையாக இருக்கும். இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், இது இயற்கை விபத்து அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்ட சோகம். இந்த கொடூரமான குற்றத்திற்கு குஜராத்தின் பா.ஜ.க. அரசு நேரடி குற்றவாளி. குஜராத்தி சகோதர சகோதரிகளின் உயிருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்து பிரதமரும், முதல்வரும் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என பதிவு செய்துள்ளார்.