சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் - ராகுல்காந்தி

 
rahul

52 வயதான முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனக்கு திருமணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

rahul


தற்போது ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்லி டேல்ஸின் யூடியூபர் கமியா ஜானியுடன் நடத்திய நேர்காணலில், “சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். எனது பெற்றோர் அழகான திருமணத்தை செய்து கொண்டனர். அவர்கள் ஒருவரையொருவர் முழுமையாக காதலித்தனர். எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய், நான் அதுபோன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். அப்பெண் அம்மா, பாட்டியின் குணநலங்கள் கலந்து இருந்தால் நல்லது. என் வாழ்க்கையில் என் பாட்டி இந்தியா தான் என் வாழ்வின் காதல் மற்றும் இரண்டாம் தாய். எனக்கு அசைவ சாப்பாடு மிகவும் பிடிக்கும். பலாப்பழம் மற்றும் பட்டாணி சாப்பிடுவதை விரும்பவில்லை. எனக்கு 24 அல்லது 25 வயது இருக்கும்போது லண்டனில் உள்ள ஒரு உத்தி ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்ததற்காக சுமார் 3,000 பவுண்டுகள் சம்பாதித்தேன்” என தெரிவித்தார்.