உங்களுக்கும், உங்களின் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கும்.. காஷ்மீர் மக்களிடம் ராகுல் காந்தி உறுதி

 
ராகுல் காந்தி

உங்களுக்கும்  உங்கள் மாநில  அந்தஸ்து மறுசீரமைப்புக்கும் (கோரிக்கை) காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரவளிக்கும் என்று காஷ்மீர் மக்களிடம் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஜம்முவில் சத்வாரி சௌக்கில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: உங்களுக்கும் (காஷ்மீர் மக்கள்) உங்கள் மாநில அந்தஸ்து மறுசீரமைப்புக்கும் (கோரிக்கை) காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரவளிக்கும். மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க, காங்கிரஸ் நமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும். 

காங்கிரஸ்

மாநில உரிமை உங்கள் மிகப்பெரிய பிரச்சினை. மாநில அந்தஸ்து போன்ற பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. உங்கள் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனது நடைப்பயணத்தின்போது ஜம்மு காஷ்மீர் மக்களிடம் பேசினேன். அப்போது,  எங்கள் பிரச்சினைகளை எழுப்பினோம் ஆனால் எங்களின் குரல்கள் நிர்வாகத்திற்கு செவிசாய்க்கப்படுவதில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். முழு வர்த்தகமும் வெளியாட்களால் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் அவற்றை மகிழ்ச்சியின்றி உட்கார்ந்து பார்க்கிறார்கள். 

காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்…. பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

நாட்டிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இளைஞர்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆக விரும்புகிறார்கள் ஆனால் அவர்களால் முடியாது. முன்பு வேலைவாய்ப்பு பெற வேறு வழி இருந்தது,  அது ராணுவத்திடம் இருந்தது. அதுவும் இப்போது பா.ஜ.க. அறிமுகப்படுத்திய அக்னிவீர் என்ற புதிய திட்டத்தால் மூடப்பட்டுள்ளது. அந்த பாதையும் இப்போது மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 2019 ஆகஸ்ட் மாதம் மத்திய பா.ஜ.க. அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சிறப்பு சட்டப்பிரிவு 370வது பிரிவை ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முன்மொழிந்தது.