பாதயாத்திரையால் கால்களில் கொப்புளம் - நாளை ஓய்வெடுக்கிறார் ராகுல் காந்தி..

 
பாதயாத்திரையால் கால்களில் கொப்புளம் -  நாளை ஓய்வெடுக்கிறார் ராகுல் காந்தி..

ஒற்றுமைக்கான பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதால், நாளை அவர் ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.  நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக  150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.  இந்த யாத்திரையானது  திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விக்ரபாத், ஜல்கயோன், இந்தூர், ஆழ்வார், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு சென்று ஸ்ரீ நகரில் முடிவடைகிறது. இதில் ராகுல் காந்தியுடன்  காங்கிரஸ் தலைவர்கள் 120 நடைபயணம் மேற்கொள்கின்றனர்.

பாதயாத்திரையால் கால்களில் கொப்புளம் -  நாளை ஓய்வெடுக்கிறார் ராகுல் காந்தி..

அதன்படி, கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில்  தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியகொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.  தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற ராகுலின் நடை பயணம் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது.   கடந்த 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்,  நேற்று அவர் திருவனந்தபுரம், கணியாபுரத்தில்  பாதயாத்திரையை தொடங்கினார்.  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொண்டர்களுடன் தொடர்ந்து நடந்த ராகுல்,    இரவு 8 மணி அளவில் கல்லம்பலத்தில் நிறைவு செய்தார்.  அங்கு இரவு அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டனர்.   

பின்னர் இன்று காலை 7.30 மணிக்கு கல்லம்பலத்தில் இருந்து மீண்டும் 8வது நாள் பாதயாத்திரையை ராகுல்  தொடங்கினர். முதல் நிகழ்ச்சியாக  சிவகிரி மடத்திற்கு  சென்ற அவருக்கு,  கோவில் நிர்வாகிகள் உற்சாக  வரவேற்பளித்தனர். அங்கு,  சமூக சீர்திருத்த வாதியும், துறவியுமான ஸ்ரீநாரயணகுருவுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய ராகுல் காந்தி,   இந்து மதத்தின் பிரதான வார்த்தை ஓம் சாந்தி தான்,  ஆனால் இந்துக்களின் காவலன் என்று கூறிகொள்ளும் கட்சி, ஓம் சாந்தி என்ற வார்த்தைக்கு எதிராக நடந்து கொள்வதாக கூறினார். மேலும், அவர்கள் மதநல்லிணக்கத்தை கெடுப்பது,  ஒற்றுமையை சீர்குலைப்பது,  மக்களை பிளவுபடுத்துவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.  அத்துடன் மக்களை ஒன்றுபடுத்தவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.  

பாதயாத்திரையால் கால்களில் கொப்புளம் -  நாளை ஓய்வெடுக்கிறார் ராகுல் காந்தி..

தற்போது  கொல்லம் மாவட்ட எல்லையான கடம்பாட்டு கோணத்தில் யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது.  ஓய்வுக்குப் பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும்  யாத்திரை தொடங்கவுள்ளது.  ராகுல் காந்தி தொடர்ந்து 8 நாட்களாக  நடந்து வருவதால் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,  காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் எனது ஒற்றுமை பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதேநேரம்,   ராகுல் காந்தி நாளை ஓய்வெடுக்க உள்ளதாக  பாதயாத்திரை குழுவினர் தெரிவித்துள்ளனர். நாளை ராகுல் காந்தி ஓய்வு எடுப்பதால் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.