காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

 
Rahul Gandhi

பாதயாத்திரையின் போது மாரடைப்பால் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அஞ்சலி செலுத்தினார். 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை  பயணத்தில்  பங்கேற்ற எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்தார். இன்று காலை பஞ்சாப் லூதியானாவில் நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றபோது அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி.சந்தோக் சிங் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாப் பில்லூர் பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற  நிலையில் இந்த எதிர்பாராத துயர சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக ஒற்றுமைப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  சந்தோக் சிங் சவுத்ரி பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி எம்பி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தோக் சிங் சவுத்ரி எம்.பியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். எங்கள் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார். 

rahul

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே பாதயாத்திரையின் போது மாரடைப்பால் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.