என் டி-சர்ட்டை கவனித்த ஊடகங்கள், என்னுடன் நடந்து வரும் ஏழை விவசாயிகளின் கிழிந்த ஆடைகளை பற்றி கேட்கவில்லை.. ராகுல்

 
டெல்லிக்கு சென்றது ராகுல் காந்தியின் பாத யாத்திரை..  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

நான் டி-சர்ட்டை கவனித்த ஊடகங்கள், என்னுடன் நடந்து வரும் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை பற்றி கேட்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரை சமாளிக்க அங்குள்ள மக்கள் கதகதப்பாக வைத்திருக்க உதவும் ஆடைகளை அணிந்து வெளியே செல்கின்றனர். இந்த அளவுக்கு கடுமையான குளிரிலும் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது அரைக் கை  டி-சர்ட் அணிந்தே நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தி டி-சர்ட் அணிந்து வருவது தொடர்பாக ஊடகங்கள் எழுதின. இந்நிலையில்,  நான் டி-சர்ட்  அணிவதை கவனித்த ஊடகங்கள், என்னுடன் நடந்து வரும் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கிழிந்த ஆடைகளை பற்றி கேட்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஊடகம்

நான் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் டி-சர்ட் அணிந்து செல்கிறேன். பல ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்து யாத்திரையில் என்னுடன் செல்கின்றனர். ஆனால், குளிர்காலத்தில் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஏன் ஸ்வெட்டர் அல்லது ஜாக்கெட் இல்லாமல் நடக்கிறார்கள் என்று ஊடகங்கள் கேட்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டம்

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில், முன்பு இளைஞர்கள் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூதியம்  பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஓய்வூதியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆறு மாதம் பயிற்சி, துப்பாக்கியை கையில் பிடித்து, 4 ஆண்டுகள் பணி, பிறகு உங்களை வெளியேற்றி, நீங்கள் வேலையில்லாமல் போவது பற்றி யோசித்தார். இது புதிய இந்தியா என தெரிவித்தார்.