இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா சோதனை

 
corona

ஜனவரி 1 முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், புறப்படுவதற்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை செய்வது கட்டாயமாக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

Coronavirus Testing - How to Test for Coronavirus, Types of Tests |  Narayana Health


சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், புறப்படுவதற்கு முன் கட்டாயமாக ஆர்டிபிசிஆர் சோதனைகளைச் செய்து, ஜனவரி 1, 2023 முதல் ஏர் சுவிதா போர்ட்டலில் அறிக்கையைப் பதிவேற்ற வேண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களிலும்,  பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் 2 சதவீத சீரற்ற  சோதனைகளுக்கு கூடுதலாக இந்தச் சோதனை மேற்கொள்வது அவசியமாகிறது.

உலகம் முழுவதும் குறிப்பாக மேற்கூறிய நாடுகளில் நிலவும் கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு  இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.