மார்ச் மாதத்தில் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜ.க. தலைவர் நட்டா

 
ஜே.பி.நட்டா

எதிர்வரும் மார்ச் மாதத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பு அகில பாரதிய பிரதிநிதி சபா. ஹரியானா மாநிலம் பானிபட்டில் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் மூன்று நாள் கூட்டம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய பிரச்சார் பிரமுகர் சுனில் அம்பேத்கர் டிவிட்டரில், ஹரியானாவில் உள்ள சமல்காவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம் மார்ச் 12 முதல் 14ம் தேதி நடைபெறும் என பதிவு செய்துள்ளார்.

மோகன் பகவத்

பா.ஜ.க. உள்பட ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஆண்டு முழுவதும் மேற்கொண்ட தங்களது செயல்பாடுகளின் அறிக்கையை இந்த கூட்டத்தில் தாக்கல் செய்யும். இந்த கூட்டத்தில், மோகன் பகவத் மற்றும் தத்தாத்ரேயா உள்பட ராஷ்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அனைத்து முக்கிய நிர்வாகிகளும், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் சங்கத்தின் பிற கூட்டணி அமைப்புகளின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

சங்க நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 1,800 பேர் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கத்தின் முழு ஆண்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் திட்டம் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அகில பாரதிய பிரதிநிதி சபாவின் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளதால் இந்த கூட்டம் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.