நாட்டில் 99 சதவீத முஸ்லிம்கள் தங்கள் முன்னோர்கள், கலாச்சாரம், பாரம்பரியம், தாய்நாடு அடிப்படையில் இந்தியர்கள்தான்.. ஆர்.எஸ்.எஸ்.

 
எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

இந்தியாவில் 99 சதவீத முஸ்லிம்கள் தங்கள் முன்னோர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தாய்நாட்டின் அடிப்படையில் இந்துஸ்தானிகளாக (இந்தியர்கள்) உள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உட்டானில் உள்ள ராம்பாவ் மல்கி பிரபோதினியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் செயல்பாட்டாளர்களின் இரண்டு நாள் மாநில அளவிலான பயிரலங்கின் நிறைவு விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: புனித குர்ஆனின் வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளின்படி நமது தேசத்திற்கான நமது கடமையை நாம் மிக உயர்ந்ததாகவும் மற்ற எல்லா விஷயங்களுக்கும் மேலாகவும் கருத வேண்டும். 

இந்திரேஷ் குமார்

நம் நாட்டில் 99 சதவீத முஸ்லிம்கள் தங்கள் முன்னோர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தாய்நாட்டின் அடிப்படையில் இந்துஸ்தானிகளாக (இந்தியர்கள்) உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் இந்தியர்களுக்கு பொதுவான டி.என்.ஏ. இருப்பதாக குறிப்பிட்டார். இதில் டி என்பது நாம் அன்றாடம்  காணும் கனவுகள், என் என்பது பூர்வீக தேசத்தை குறிக்கிறது. ஏ என்பது முன்னோர்களை குறிக்கிறது. 

முஸ்லிம்கள்

நாம் அனைவரும் நம் தாய்மொழியில் கனவு காண்கிறோம். நமக்கு பொதுவான மூதாதையர்கள் உள்ளனர் மற்றம் பொதுவாக பூர்வீகத்தை பகிர்ந்து கொள்கிறோம், இது நம் அனைவருக்கும் பொதுவான டி.என்.ஏ.வைப் பகிர்ந்து கொள்ள செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.