என்னுடையது மட்டுமே உண்மை, உங்களுடையது பொய் என்று நாங்கள் கூறவே இல்லை... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

 
ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்…

என்னுடையது மட்டுமே உண்மை, உங்களுடையது பொய் என்று நாங்கள் கூறவே இல்லை. நீங்கள் உங்கள் இடத்தில் சரி, நான் என்னுடைய இடத்தில் சரி, ஏன் சண்டையிட வேண்டும், ஒன்றாக செல்வோம் என்று இந்து-முஸ்லிம் தொடர்பாக  ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முஸ்லிம்கள் தாங்கள் ஒரு உயர்ந்த இனம் இந்துக்களுடன் வாழ முடியாது என்ற இந்த கதையை கைவிட வேண்டும். முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேச பேச்சுக்களைக் கைவிட வேண்டும். நாங்கள் உயர்ந்த இனத்தை சேர்ந்தவர்கள், இந்த நிலத்தை ஒரு முறை ஆண்டோம், மீண்டும் ஆட்சி செய்வோம், எங்கள் பாதை மட்டுமே சரியானது, மற்ற அனைவரது பாதைகளின் தவறு, நாங்கள்  வேறுபட்டவர்கள், எனவே நாங்கள்  தொடர்ந்து இருப்போம், நாம் (இந்து-முஸ்லிம்)  ஒன்றாக வாழ முடியாது என்ற இந்த கதையை அவர்கள் (முஸ்லிம்கள்) கைவிட வேண்டும். 

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

உண்மையில் இந்துவாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டாக இருந்தாலும் சரி இங்கு வசிக்கும் அனைவரும் இந்த தர்க்கத்தை கைவிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியா பிரிக்கப்படாமல் இருந்தது. ஆனால் அடிப்படை இந்து உணர்வு மறக்கப்படும்போதெல்லாம் பிளவுபட்டது. இந்து என்பது நமது அடையாளம், நமது தேசியம், நமது நாகரீகப் பண்பு-எல்லோரையும் நம்மவர்கள் என்று கருத்தும் பண்பு. அது அனைவரையும் அழைத்து செல்கிறது. என்னுடையது மட்டுமே உண்மை, உங்களுடையது பொய் என்று நாங்கள் கூறவே இல்லை. நீங்கள் உங்கள் இடத்தில் சரி, நான் என்னுடைய இடத்தில் சரி, ஏன் சண்டையிட வேண்டும், ஒன்றாக செல்வோம். 

முஸ்லிம்கள்

எளிமையான உண்மை என்னவென்றால், இந்த இந்துஸ்தான், இந்துஸ்தானாகவே இருக்க வேண்டும். இன்று பாரதத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, இஸ்லாம் பயப்பட ஒன்றுமில்லை. நீங்கள் பார்க்கிறீர்கள், இந்து சமுதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டம் அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும், வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் வெளிநாட்டு சதிகளுக்கு எதிராகவும் நடந்து வருகிறது. இதற்கு சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தனது ஆதரவை வழங்கியது, மற்றவர்களும் உள்ளனர். பலர் பேசுகிறார்கள். இவை அனைத்தின் காரணமாகவும் இந்து சமுதாயம் விழித்துக் கொண்டது. போரில் ஈடுபடுபவர்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கையானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.