நேதாஜியின் முடிக்கப்படாத பணிகள் முடிக்கப்பட வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

 
நேதாஜி

நேதாஜியின் முடிக்கப்படாத பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஷஹீத் மினாரில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில் கூறியதாவது: நேதாஜியின் முடிக்கப்படாத பணிகள் முடிக்கப்பட வேண்டும். 

மோகன் பகவத்

நேதாஜி நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தவர். நேதாஜி சுயநலம் பார்த்ததில்லை. அவர் அவ்வளவு படித்தவர், அவர் ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் நாடு கடத்தலை தேர்ந்தெடுத்தார். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தார். அவர் தனது வாழ்நாளை நாட்டுக்கா அர்ப்பணித்தார். நாம் நேதாஜிக்கும், குரு கோவிந்த் சிங்குக்கும் நீதி செய்யவில்லை. பிறர் நலன் கருதி வேலை செய்பவர்களும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும். 

நேதாஜி பிறந்த நாள்

அவர் எதையும் எதிர்பார்க்காததால் தான் இன்றும் நாம் அவரை நினைவுகூறுகிறோம். அவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், முன்னோக்கி சென்று நாட்டிற்காக போராடினார். அதிகாரத்துக்கு சவால் விடுத்தார். அதிர்ஷ்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் எங்கள் துறையில் நீண்ட தூரம் சென்றிருக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.