இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி- நாளை வெளியீடு

 
rbi

இந்தியாவின் டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி  நாளை அதிகாரப்பூர்வ அறிமுகப்படுத்தவுள்ளது.  9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

What is a Digital Rupee? RBI to pilot launch on November 1 - BusinessToday


e₹ என்று சொல்லப்படும் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் Wholesale பரிவர்த்தனைகளுக்காக சோதனை முயற்சியில் நாளை முதல் டிஜிட்டல் ருபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் Retail பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.


பாரத ஸ்டேட் வங்கி (SBI), பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் HSBC ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சிகளை பெற்றுக்கொள்ளலாம். கடந்த பிப்ரவரி 1, 2022 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022-23 நிதியாண்டு முதல் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவி்த்திருந்தது குறிப்பிடதக்கது.