நாளை மறுநாள் பஞ்சாபில் அடியெடுத்து வைக்கும் ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்.. காங்கிரஸ் தகவல்

 
டெல்லிக்கு சென்றது ராகுல் காந்தியின் பாத யாத்திரை..  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

ஜனவரி 10ம் தேதியன்று ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஷம்பு எல்லை வழியாக பஞ்சாபில் நுழைகிறது என்று அம்மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங், பொறுப்புச் செயலாளர் ஹரிஷ் சவுத்ரி மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பர்தாப் சிங் பஜ்வா உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஜனவரி 10ம் தேதியன்று ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஷம்பு எல்லை வழியாக பஞ்சாபில் நுழைகிறது. பின்பு பதேகர் நகருக்கு யாத்திரை செல்லும். ஜனவரி 11ம்  தேதியன்று குருத்வாரா சாஹிப் செல்கிறார். 

காங்கிரஸ்

அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்குவதற்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது மற்றும் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் குரோனி முதலாளித்துவம் போன்ற சில அவசர பிரச்சினைகளை நோக்கி நாட்டின் கவனத்தை ஈர்ப்பதாகவும் உள்ளது. இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அதன் நோக்கத்திலும், பணியிலும் வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கட்சி சார்பான பயணம் அல்ல. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். அதற்கு தளவாட ஆதரவை கட்சியும், தொண்டர்களும் அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது ஹரியானாவில் நடைபெற்று வருகிறது. ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இன்னும் பஞ்சாப் மற்றும் ஜம்மு அண்ட் காஷ்மீர்  மட்டுமே எஞ்சியுள்ளன.