யுவராஜ் சிங்குக்கு தண்டனை...கோவா சுற்றுலாத் துறை அதிரடி

 
யு

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  கோவா மாநிலத்தில் உள்ள மோர்ஜிம் என்கிற பகுதியில் உள்ள  யுவராஜ் சிங்கின் இல்லத்தை முறையாக பதிவு செய்யவில்லை என புகார் கூறி அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிசம்பர் எட்டாம் தேதி இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருக்கிறது.

 கோவா சுற்றுலா வர்த்தக பதிவு சட்டம் 1982 ன் கீழ் மாநில சுற்றுலாத்துறை இடம் ஹோம்ஸ்டே பதிவு செய்வது கட்டாயம்.  அப்படி இருக்கும்போது காசாசிங் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வில்லாவிற்கு வடக்கு கோவாவில் இருக்கும் போர்ஜிம்மில் அமைந்திருக்கிறது.   நவம்பர் 18ஆம் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.   டிசம்பர் எட்டாம் தேதி காலை 11 மணிக்கு  நேரில் ஆஜராக வேண்டும் என்று சுற்றுலாத்துறை துணை இயக்குனர் ராஜேஷ் காலேஜ் உத்தரவிட்டுள்ளார். 

யு

வர்த்தக சட்டத்தின் கீழ் சொத்தை பதிவு செய்யாததற்காக ஏன் அபராத தொகை ஒரு லட்சம் ரூபாய் விதிக்கக்கூடாது என்றும் அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டிருக்கிறது. 

கோவாவில் வர்சேவாடா, மோர்ஜிம், பெர்னெம் ஆகிய இடங்களில் உள்ள  குடியிருப்பு வளாகம் ஹோம்ஸ்டேயாகச் செயல்படுவதாக தெரியவந்துள்ளது.  யுவராஜ்சிங்கின் ட்வீட்டையும் சுற்றுலாத்துறை மேற்கோள் காட்டியுள்ளது.   அதில் , அவர் தனது கோவா வீட்டில் ஆறு பேர் கொண்ட குழுவிற்கு பிரத்யேக தங்குமிடத்தை  மட்டுமே வழங்குவதாகக் கூறியுள்ளார்.   இங்குதான் நான் எனது அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட்டேன்.  ஆடுகளத்தில் எனது ஆண்டுகளின் நினைவுகளால் வீடு நிரம்பியுள்ளது என்று டுவிட் செய்துள்ளார்.

ஓட்டல் மற்றும் விருந்தினர் மாளிகையை இயக்குவதற்கு முன், அதை இயக்கும் ஒவ்வொரு நபரும், பரிந்துரைக்கப்பட்ட முறையில் பரிந்துரைக்கப்பட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், கோவா சுற்றுலா வர்த்தகப் பதிவுச் சட்டம், 1982 இன் கீழ் பதிவு செய்யத் தவறியதற்காக உங்கள் மீது ஏன் தண்டனை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் நோட்டீஸில்.  

இது தொடர்பாக டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் யுவராஜ் சிங்கிடம் இருந்து பதில் வரவில்லை என்றால், நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் சரியானவை என்றும், பிரிவு 22 இன் கீழ் அல்லது ஏதேனும் மீறப்பட்டதாகவும் கருதப்படும். சட்டத்தின் விதிகளின்படி, நீங்கள் ரூ. 1 லட்சம் வரை அபராதத்துடன் தண்டிக்கப்படுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.