ஜிப்மரில் இந்தி திணிப்பு என்பதே கிடையாது - தமிழிசை விளக்கம்

 
tamilisai

ஜிப்மரில் இந்தி என்பது கிடையாது எனவும் தமிழ் மக்களுக்கான சேவை ஜிப்மரில் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதாகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள தீர்ப்பாக மையத்தில் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அகர்வால் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது: ஜிப்மரின் உள்கட்டமைப்பிற்காக நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட சுற்றிக்கை இந்தி திணிப்பை போன்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி நிர்வாகம் சார்பில் 4 சுற்றிக்கை அனுப்பப்பட்டது. அதில் 1 சுற்றிக்கையில் ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தவும், 2வது முடிந்தவரை இந்தியை பயன்படுத்துங்கள் என அனுப்பப்பட்டு இருந்தது. பொதுமக்கள் தொடர்பு, கருத்து பரிமாற்றம், சீட்டு பரிமாற்றம் போன்றவற்றில் தமிழ் இருக்க வேண்டும் என 3 வது சுற்றிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனம் ஜிப்மர் என்பதால் இந்தி தெரிந்த பல பேர் பணி புரிந்து வருகின்றனர்.

tamilisai

இதுபோல் பெயர் பலகையில் முதலில் தமிழும் பின்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழுக்கு பெருமை சேர்க்கவும், தமிழ் மக்களுக்கு உள்ள தொடர்பு எந்த விததிலும் மாறுபடாமலும், வேறுபடாமலும் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தி தெரிந்தவர்கள் ஜிப்மரில் பணிபுரிவதன் காரணமாக அவர்களுடைய சர்வீஸ் புத்தகத்திற்காக இந்தியை பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டது அதில் இந்தி சம்பந்தப்பட்ட சுற்றிக்கை வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தன்னை பொறுத்து வரை பிரதானமான சுற்றிக்கை என்னவென்றால் தமிழ் ஜிப்மரில் பயன்படுத்த வேண்டும் என்பது தான்.  ஜிப்மரில் இந்தி என்பது கிடையாது. தமிழ் மக்களுக்கான சேவை ஜிப்மரில் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்கிறது.
வெறி, திணிப்பு என்பது கிடையாது. இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.