ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை - மாநில அரசு அதிரடி உத்தரவு

 
Andhra

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாகங்கா - பாமுரு சாலையில் உள்ள  கந்துகூரில் உள்ள என்டிஆர் சந்திப்பு அருகே கடந்த 28ம் தேதி தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த  8 பேர் உயிரிழந்தனர்.  இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சந்திரபாபுவின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக சந்திரபாபுவின் பொதுக்கூட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி நடத்திய இரு கூட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.