குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம்

 
குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம்

குடியரசுத் தலைவர் மாளிகை டிசம்பர் 1, 2022 முதல் வாரத்தின் 5 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும். 

குடியரசுத் தலைவர் இல்லம் | குடியரசுத் தலைவர் இல்லம் - hindutamil.in

புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (கெசட்டில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்கள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு மணி நேரமும் பார்வையிட  அனுமதிக்கப்படும்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கெசட்டில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்கள் தவிர) 6 நாட்கள் வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் படை வீரர்கள் மாற்றுதல் நிகழ்ச்சியைக் காணவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கெசட்டில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களில் அந்த சனிக்கிழமை இடம் பெற்றிருந்தால் இந்நிகழ்ச்சி நடைபெறாது.

பார்வையாளர்கள் தங்களது வருகையை  http://rashtrapatisachivalaya.gov.in/rbtour  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.