‘பதான்’ படத்திற்கு எதிர்ப்பு.. குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங் தள் அமைப்பு...

 
pathan


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற பதான்  திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர்..

சுதா ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான்,  தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வருகிற 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.  இந்த படத்தில் இருந்து அண்மையில் வெளியான ‘பேஷரம் ரங்’பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த பாடலில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி அடைந்திருந்ததே  சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் பதான் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  மேலும் இந்த படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குஜராத் , பதான்

 இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பாதம் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு வந்த பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பதான் படத்தின் போஸ்டர்களையும் பதாகைகளையும் கிழித்து  எரிந்து வன்முறையில் ஈடுபட்டனர். பாடலில் தீபிகா படுகோனே காவி நிற  உடை அணிந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,  லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாலும்  பதான்  படத்தை திரையிடக்கூடாது என்று  பஜ்ரங் தள்  அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே  வணிக வளாகத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையிலும்,  பதான்  திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எரிந்தும் வன்முறையில் ஈடுபட்ட  5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.