பாஜக துணைத்தலைவரின் பண்ணைவீட்டில் விபச்சாரம்! 500 காண்டம் பாக்கெட்டுகள் -400 மது பாட்டில்கள் பறிமுதல் -73 பேர் சிக்கினர்

 
b

 பாஜக துணைத் தலைவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடந்த சோதனையில் 400 மது பாட்டில்கள்,  500க்கும் மேற்பட்ட காண்டம் பாக்கெட்டுகள் , 27 வாகனங்கள், 47 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.   6 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

b

மேகாலயா மாநிலத்தில் பாஜக துணை தலைவர் பெர்னார்டு என் மராக்.   மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கிறது இவரின் பண்ணை வீடு.  இந்த பண்ணை வீட்டில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.   இந்த தகவலின் பெயரில் போலீசார் அந்த பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள் . 

bb

அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 73 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.   நான்கு சிறுவர்கள் இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேரும் மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்களும் சிறுமிகளும் பதுங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள்.   அந்தப் பண்ணை வீட்டில் இருந்த 400 மதுபாட்டில்கள் 500க்கும் மேற்பட்ட காண்டம் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   மேலும் இந்த பண்ணை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 வாகனங்களும்,  அங்கிருந்த  47 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

be

 இந்த பண்ணை வீட்டுக்கு சொந்தமான பாஜக துணைத் தலைவர் பெர்னார்டு  மீது 25க்கும் மேற்கட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிறது அம்மாநில காவல்துறை .  இந்த நிலையில் இந்த ரெய்டு குறித்த விசாரணைக்கு பெர்னாட் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . ஆனால் தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்திருக்கிறார்  பெர்னார்டு.  இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் கூறியிருக்கிறார்.