பெங்களூருவில் ரகசிய சுரங்க அறை அமைத்து விபச்சாரம்!

 
prostitution

பெங்களூரு நகரில் தனியார் விடுதியில் ரகசிய சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடத்தி வந்தது காவல்துறை சோதனையில் அம்பலமானது.

Tell me if you still think prostitution is empowering after hearing what  the buying punters have to say | The Independent | The Independent

பெங்களூரு நகரில் இன்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் பெங்களூரு மார்கெட், காட்டென் பேட் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரை அடுத்து பல்வேறு விடுதிகளில் சோதனை செய்தனர். அப்போது துர்கா விடுதியில் காவல்துறையினர் சோதனை செய்த போது அந்த விடுதியில் உள்ள அறையில் இரகசியமாக சுரங்க அறை அமைத்து அதற்குள் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது‌. 

காவல்துறை சோதனையின் போது இரசிய அறையில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் விபச்சாரம் நடத்தி வந்த இரண்டு ஆண்களையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று மொத்தமாக மூன்று விடுதிகளில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் மற்றும்  விபச்சாரம் நடத்தி வந்த 6 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.