இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி வங்கதேசம்- பிரதமர் மோடி

 
Modi - NITI Aayog

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் வங்கதேசம் மிகப்பெரிய உறுதுணையாக உள்ளது என்று வங்கதேச பிரதமர் உடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

indbanpm

4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இருதரப்பு சந்திப்புக்குப் மற்றும் பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டிலும் இளம் தலைமுறையின் ஆர்வத்தை மையப்படுத்தி தகவல் தொழில்நுட்பம் விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் இந்தியா வங்கதேசம் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா வங்கதேசம் இடையிலான மின்சார பரிமாற்றம் தொடர்பான ஆலோசனையும் இரு நாட்டின் பிரதமர்கள் சந்திப்பின்போது இடம்பெற்றதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார். மேலும் இரு நாடுகளும் காலநிலை மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் மீது தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும் எனவும் வங்கதேச பிரதமர் தெரிவித்தார். அப்போது வங்கதேச பிரதமரின் வருகைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்று நிறைவடைந்திருக்கும் இந்நாளில் வங்கதேசத்தின் பிரதமர் இந்தியா வந்திருப்பது முக்கியமான தருணம் எனவும் வரும் காலங்களில் இந்தியா வங்கதேசம் இடையிலான நட்புறவு புதிய உச்சத்தை தொடும் எனவும் கூறினார். 

மேலும் வங்கதேசம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய கூட்டாளியாக உள்ளதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வங்கதேச மக்களிடையே கலாச்சாரம் மற்றும் ஒற்றுமை பாடுகளில் மேலும் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.